பாஜகவுடனான கூட்டணி தொடரும் - அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உறுதி!

பல்லடம் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு பின் பேசிய உடுமலை ராதாகிருஷ்ணன், கூட்டணி விவகாரத்தில் தலைமைக்கழகம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றும், பாஜக - அதிமுக கூட்டணி தொடரும் என ஏற்கனவே தலைமைக்கழகம் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.



திருப்பூர்: அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என தலைமைக்கழகம் ஏற்கனவே அறிவித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதி பாளையத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நல திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் முன்னாள் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பெண்களுக்கு தையல் இயந்திரம், சலவை பெட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசியதாவது, அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு திறப்பு விழா நடத்தி கொண்டிருக்கிறது திமுக அரசு. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற வில்லை.

இடைத்தேர்தலுக்கு பிறகு ஈபிஎஸ் மீது எதிர்ப்பலைகள் அதிகரித்துள்ளதற்கு என்ன காரணம் என செய்தியாளர்களின் கேள்விக்கு, நான்காண்டு காலங்களாக ஈபிஎஸ் உடன் அமைச்சராக நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அவரும் ஒரே பாதையிலே சென்று கொண்டிருக்கிறார்.

இடைத்தேர்தலை பொறுத்தவரை ஆளுங்கட்சி தான் வெற்றி பெறுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு எடப்பாடியார் முதல்வராக இருந்தபோது பல்வேறு திட்டங்களை செய்து கொடுத்துள்ளார். இந்த இடைத்தேர்தலில் கணிசமான ஓட்டுகளை பெற்றுள்ளோம்.

ஆளுங்கட்சியினர் ஈரோடு இடைத்தேர்தலில் நடத்திய அத்துமீறல்களும் அனைவரும் அறிந்ததே. இடைத்தேர்தல் என்பது எங்களுக்கு புதிதானது அல்ல நாங்கள் மீண்டு வருவோம்.

அதிமுக-பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு, தலைமைக் கழகம் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம், கூட்டணி தொடரும் என தலைமை கழகம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எப்படி ஆட்சிக்கு வந்தார் என்பது எனக்கு தெரியும் என கராத்தே தியாகராஜன் அளித்த பேட்டி குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, கராத்தே தியாகராஜன் போன்றவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ரஜினி புகழாரம் சூட்டிய கேள்விக்கு இன்று ஸ்டாலினுக்கு புகழ் பாடியவர்கள் அம்மா ஆட்சியில் இருந்தபோது அம்மாவுக்கு பாடினார்கள் இது ஒன்றும் புதிதல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...