நாளை பிளஸ்2 பொதுத்தேர்வு:கோவையில் 35,541 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர் - சி.இ.ஓ தகவல்

தமிழகத்தில் நாளை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கவுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் ,541 மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வதாகவும், இதற்காக 254 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்.


கோவை: பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை 13ந் தேதி, தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரையும், பிளஸ்-1 பொதுத்தேர்வு 14-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5-ந் தேதி வரையும் நடைபெற உள்ளது. இதேபோல், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அடுத்த மாதம், ஏப்ரல் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 35 ஆயிரத்து 541 பேரும், பிளஸ்-1 பொதுத் தேர்வை 34 ஆயிரத்து 259 பேரும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 41ஆயிரத்து 526 பேரும் எழுத உள்ளனர்.

இதற்காக கோவை மாவட் டத்தில் 254 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன, இதில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் அரசு தேர்வுகள் துறை சார்பில் சென்னையில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்டன.

அவை கோவை, பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் கோவை மாவட்டத்தில் 12 கட்டுக்கோப்பு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

இதில், கோவை டவுன்ஹாலில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் பொதுத்தேர்வுக்கான வினாத் தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் அந்த அறைக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அங்கு கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன.

இதுபோல் கோவை மாவட்டத்தில் மற்ற வினாத்தாள் மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...