வால்பாறை - அதிரப்பள்ளி சாலை 10 நாட்களுக்கு மூடல் : சாலை பராமரிப்பு காரணமாக நடவடிக்கை!

கோவை வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் அதிரப்பள்ளிக்கு செல்லும் சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக 10 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளிக்கு செல்லும் சாலை பராமரிப்பு பணி காரணமாக 10 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.

வால்பாறை அருகே கேரளா மாநிலம் அதரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதி உள்ளது. வால்பாறையில் இருந்து வனப்பகுதி வழியாக மழுக்கப்பாறை அதிரப்பள்ளி செல்லும் சாலை உள்ளது.

இந்த சாலையை சுற்றுலா பயணிகளும், அரசு பேருந்தும் கேரளாவிற்கு செல்வதற்காக அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதிக்கு சுமார் 60 கிலோ மீட்டர் வனப்பகுதியில் செல்ல வேண்டும்.

வனப்பகுதியில் சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் சாலையை பராமரிக்க கேரளா அரசு பணிகள் செய்து வருகிறது. தார் சாலை அமைக்கும் பணி தீவிரம் அடைந்ததால் மழுக்கப்பாறை வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளிக்கு செல்ல 10 நாட்களுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.



மழுக்கப்பாறையில் இருந்து அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி பகுதி வரை தார் சாலை பராமரிப்பு நடப்பதால் இன்று முதல் 10 நாட்களுக்கு சுற்றுலா வாகனங்கள் தனியார் வாகனங்கள் அனைத்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...