கோவையில் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி - பார்வையாளர்களை வியக்க வைத்த குழந்தைகள்

கோவையில் தனியார் அமைப்பு சார்பில் “யாதுமாகி நின்றவள்” என்ற தலைப்பில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில், ஒய்யார நடைபோட்ட குழந்தைகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தினர்.



கோவை: கோவையில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில், ஒய்யார நடைபோட்ட குழந்தைகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தினர்.

கோவையில் இயங்கி வரும் ஃபேஷன் ஆர்ட் இன்ஸ்ட்டியூட் என்ற தனியார் அமைப்பு, பெண் தொழில் முனைவோர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது.

பெண்களுக்கான ஆடை தயாரிக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் இந்த அமைப்பு மூன்றாவது ஆண்டாக "யாதுமாகி நின்றவள்" எனும் தலைப்பில் பெண்களுக்கான ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியை கோவை சரவணம்பட்டி வணிக வளாகத்தில் நடத்தியது.



இதில் பெண்கள் தங்களது முயற்சியில் தயாரித்த ஆடைகளை அவர்களது குழந்தைகளுக்கு அணிவித்து அணிவகுப்பில் பங்கேற்க வைத்தனர்.



இதில் வண்ணமயமான ஆடைகளை அணிந்து வந்த குழந்தைகள், ஒய்யார நடைபோட்டது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.



மேலும் இதில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...