காரல் மார்க்ஸ் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை கருத்து - கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்!

காரல் மார்க்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கோவை விமான நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு காரணமாக சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: காரல் மார்க்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாக ஆளுநரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் காரல் மார்க்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவு செய்திருந்ததாக கூறி அவர் எங்கு சென்றாலும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருந்தது. ஆளுநருக்கு எதிராக கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.



இந்நிலையில் கோவை மற்றும் உதகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விமான நிலையம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பத்பநாபன் உட்பட சுமார் 50 பேர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.



பின்னர் போராட்டம் நடத்திய சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.



கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மற்றும் காவல் துறையினருக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென சாலையில் அமர்ந்தது காவல்துறை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு சாதகமாக செயல்படுவதாக கூறி முழக்கங்களை எழுப்பினர்.



இதனையடுத்து காவல் துறையினர் சாலையில் அமர்ந்த அனைவரையும் தூக்கி சென்று காவல் துறை வாகனத்தில் ஏற்றினர்.



இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...