நாளை பிளஸ்2 பொதுத்தேர்வு: பொள்ளாச்சியில் வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு பலத்த பாதுகாப்பு!

நாளைய தினம் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு துவங்கவுள்ள நிலையில் பொள்ளாச்சியில் 12ஆம் வகுப்பு வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் +2 மாணவர்களுக்கான வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு நாளை (13.3.2023) காலை தொடங்க உள்ளது. இந்த நிலையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் தனி தேர்வர்கள் உட்பட 4,143 மாணவர்கள் 4,437 மாணவிகள் என மொத்தம் 8,580 மாணவ மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.

இதற்காக தனித்தேர்வு எழுதும் மையம் உட்பட மொத்தம் 37 மையங்களில் பொது தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

முதன்மை தேர்வாளர்கள் துறை அலுவலர்கள் என 74 பேர், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் 640 பேரும், அலுவலகப் பணியாளர்கள் வழித்தட அலுவலர்கள் பறக்கும் படை என மொத்தம் 800 க்கும் மேற்பட்டோர் இந்த தேர்வு பணிகளில் ஈடுபட உள்ளனர்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 7 ஒன்றியங்ளில் பொள்ளாச்சி, கிணத்துக்கிடவு, வால்பாறை என மூன்று வினாத்தாள் மையங்கள் இருப்பு மையங்களாக தேர்வு செய்யப்பட்டது.

இந்த மையங்களில் 12ஆம் வகுப்பு வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.



மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



தேர்வு எழுதும் மையங்களில், மேஜையில் ஹால் டிக்கட் எண்கள் எழுதப்பட்டு அரசு அறிவுறுத்தலின்படி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

தவறுகள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...