குண்டடம் வாரச்சந்தையில் வரத்து அதிகரிப்பு - ஆடு, கோழிகள் விலை வீழ்ச்சி

குண்டடம் வாரச்சந்தைச் சனிக்கிழமை தோறும் அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணி வரை ஆடு, கோழிகள் விற்பனை நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி இன்று நடைபெற்ற சந்தையில் வரத்து அதிகரிப்பால் ஆடு, கோழிகள் விலை கடும் வீழ்ச்சியடைந்தது.



திருப்பூர்: குண்டடம் வாரச்சந்தையில் வரத்து அதிகரிப்பால் ஆடு, கோழிகள் விலை கடும் வீழ்ச்சியடைந்தது.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் வாரச்சந்தையில் வறட்சியால் ஆடு, கோழிகளின் வரத்து அதிகரித்து, விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

இது குறித்து ஆடுகளை வாங்கி விற்கும் வியாபாரி மகேந்திரன் கூறியதாவது, குண்டடம் வாரச்சந்தைச் சனிக்கிழமை தோறும் அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணி வரை ஆடு, கோழிகள் விற்பனை நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி வாரச் சந்தைக்கு குண்டடம், ஊதியூர், கொடுவாய், மேட்டுக்கடை, சூரியநல்லூர், பூளவாடி, பெல்லம்பட்டி, தாராபுரம், பல்லடம், பொங்கலூர், கர்நாடக உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அந்தந்த பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள், கோழிகள் விற்பனைக்காகக் கொண்டு வருகின்றனர்.

இங்கு ஆடுகளை வாங்குவதற்காக மேச்சேரி, கேரளா, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். இவர்கள் இங்கு ஆடுகளை வாங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காகவும், இறைச்சிக்காகவும் கொண்டு செல்கின்றனர்.



இந்நிலையில் வெயில் அதிகரிப்பால் மேய்ச்சல் குறைந்ததால் ஆடுகளின் வரத்து அதிகமாக இருந்தது. மேலும் இறைச்சிக் கடைகளில் விற்பனை குறைவாக இருப்பதால் இறைச்சி விற்பனையாளர்கள் ஆடுகளை வாங்குவதில் ஆர்வம் கட்டாததால் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

இதனால் கடந்த வாரங்களில் இறைச்சிக்காக வாங்கப்பட்ட 10கிலோ எடையுள்ள ஒரு ஆடு ரூ.7 ஆயிரத்துக்கு விலை போனது. ஆனால் இந்த வாரம் ரூ.6 ஆயிரத்திற்கு விலைபோனது. ரூ.12 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்த குட்டியுடன் கூடிய பெரிய ஆடுகள், இந்த வாரம் ரூ.9ஆயிரத்து விற்பனையானது.

வீடுகளில் கோழி மற்றும் சேவல்களை வளர்ப்போர் சந்தையில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்த கோழிகளை வாங்க தாராபுரம், காங்கேயம், பல்லடம்,கோவை,பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கறிக்கடைக்காரர்கள் நேரடியாக வந்து வாங்கிச் செல்கின்றனர். கோழியின் எடைக்கு தகுந்தாற்போல விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த வாரம் இறைச்சிக்கு விற்கும் கோழிகள் கடந்த வாரம் 1 கிலோ ரூ.350 முதல் ரூ.450 வரை விலைபோனது. ஆனால் இந்த வாரம் 1 கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விலை போனது என்றார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...