குண்டடம் அருகே பாம்பு கடித்து முதியவர் உயிரிழப்பு

குண்டடம் அருகேயுள்ள கெத்தல்ரேவ் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தன்(75). மரம் ஏறும் தொழில் செய்து வந்த இவர் சமையல் அறையில் சமைத்த போது, அங்கு மறைந்திருந்த கட்டுவிரியன் பாம்பு கடித்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


திருப்பூர்: குண்டடம் அருகே முதியவரை பாம்பு கடித்ததில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அடுத்துள்ள கெத்தல்ரேவ் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தன் (75), மரம் ஏறும் தொழில் செய்து வந்த இவர், கடந்த 8ஆம் தேதி வீட்டில் சமையல் செய்தபோது சிலிண்டருக்கு அடியிலிருந்த கட்டுவிரியன் பாம்பு கடித்தது.

வலியால் துடித்த அவரை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளித்த பின்னர் மேல்சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த முத்தன் நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகாரின் பேரில் குண்டடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...