கோவையில் குதிரை மேல் நின்று சிலம்பம் சுற்றி 5வயது சிறுவன் சாதனை

கோவை சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் தமிழ்வாணன் - உமாமகேஷ்வரி தம்பதி. இவர்களது 5 வயது மகன் ரோகன்குமார். 4வயது முதல் சிலம்பம் கற்று வரும் சிறுவன், குதிரை மேல் நின்றவாறு தொடர்ந்து 2 மணி நேரம் இரட்டை சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார்.



கோவை: கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் குதிரை மேல் நின்றவாறு தொடர்ந்து 2 மணி நேரம் இரட்டை சிலம்பம் சுற்றி 5 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார்.

கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்த தமிழ்வாணன் - உமாமகேஷ்வரி தம்பதி. இவர்களது 5 வயது மகன் ரோகன்குமார் எல்.கே.ஜி படித்து வருகிறார். ரோகன்குமார் 4 வயதில் இருந்தே சிலம்பம் கற்று வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் குதிரை மேல் நின்றவாறு தொடர்ந்து 2 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார்.

இந்நிலையில் இன்று சரவணம்பட்டி பகுதியில் உள்ள கவுமார மடத்தில் மீண்டும் குதிரை மேல் ஏறி நின்று தொடர்ந்து இரண்டு மணி நேரம் இரட்டை சிலம்பம் சுற்றி நோபல் வேல்டு ரெக்கார்டு செய்துள்ளார். சாதனையை நிகழ்த்திய சிறுவனை பெற்றோர், உறவினர்கள் தூக்கி ஆரவாரம் செய்தனர்.



அதனைத் தொடர்ந்து சிறுவன் ரோகன்குமார் செய்த சாதனைக்கான கோப்பைகள், பதக்கங்கள் வழங்கப்பட்டது.



இதே போல அவர்களது மூத்த மகள் நித்தியாஸ்ரீ (13), 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் தொடர்ந்து 2 மணி நேரம் ஒற்றைக் கையில் சிலம்பம் சுற்றியவாறு உடல் உறுப்புகளின் படங்கள், விழிப்புணர்வு படங்கள் என 11 படங்களை வரைந்து சாதனை படைத்துள்ளார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...