ஆஸ்கர் விருது வென்றது ‘The Elephant Whisperers’ ஆவணப்படம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

நீலகிரி மாவட்டம், முதுமலையை சேர்ந்த பழங்குடியின தம்பதி பொம்மன் - பெள்ளி குறித்த ‘The Elephant Whisperers’எனும் ஆவணப்படம், ஆஸ்கர் விருது வென்றுள்ளது. அனைத்து விருதுக்கும் தகுதியான ஆவணப்படம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவின் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விருது விழா அங்குள்ள டால்பி திரையரங்கில் இந்திய நேரப்படி இன்று காலை 5:30 மணிக்கு தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த விழாவில், இந்திய நடிகை தீபிகா படுகோன் விருது வழங்குபவர்களில் ஒருவராக அங்கம் வகித்துள்ளார்.



இந்நிலையில், தமிழகத்தில் படமாக்கப்பட்ட ‘The Elephant Whisperers’ என்ற ஆவணப்படம், சிறந்த ஆவண குறும்படமாக, ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.



இந்த ஆவணப்படமானது, தமிழ்நாட்டின் முதுமலையில் யானை கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டி யானைகளை பராமரித்த பழங்குடியின தம்பதி பொம்மன் - பெள்ளி, அவர்கள் வளர்த்த ரகு என்ற யானையையும் மையமாக வைத்து வன புகைப்பட கலைஞர் கார்த்திகி குன்செல்வெஸ் இயக்கத்தில், குனெட் மொன்கோ தயாரிப்பில் உருவாக்கப்பட்டது.



காட்டுநாயக்கர் பழங்குடிகளான பொம்மன், பெள்ளியின் வாழ்வியல் மற்றும் யானைகளுடன் அவர்களுக்கான உறவையும் இந்த ஆவணப்படம் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்து, உலகின் மூலைமுடுக்கெல்லாம் தற்போது பொம்மன், பெள்ளி என்ற பெயர்களை முணுமுணுக்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஆஸ்கர் விருதுவென்ற இந்த ஆவணப்படத்திற்கும், படக்குழுவிற்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், அனைத்து விருதுக்கும் தகுதியான ஆவணப்படம் என்றும், முதன் முதலாக இரண்டு பெண்கள் இந்தியாவுக்கு ஆஸ்கர் விருது பெற்றுத் தந்ததைவிட சிறந்த செய்தி எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...