கோவையில் 128 மையங்களில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம் - 35,827 மாணவர்கள் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் உள்ள 360 பள்ளிகளைச் சேர்ந்த 16,661 மாணவர்கள், 19,166 மாணவிகள் உட்பட மொத்தம் 35,827 பேர் இந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். தேர்வு அட்டவணைப்படி இன்று மொழித்தாள் தேர்வு நடைபெறுகிறது.



கோவை: தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கி, ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான 6 தேர்வு மையங்கள் உள்பட மொத்தம் 128 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 12 வினாத்தாள் பாதுகாப்பு மையங்கள், 2 விடைத்தாள் பாதுகாப்பு மையங்கள், 32 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள 360 பள்ளிகளைச் சேர்ந்த 16,661 மாணவர்கள், 19,166 மாணவிகள் உட்பட மொத்தம் 35,827 பேர் இந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். தேர்வு அட்டவணைப்படி இன்று மொழித்தாள் தேர்வு நடைபெறுகிறது.

மாவட்டம் முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் சரியான நேரத்தில் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தேர்வு வினாத்தாள்களை பாதுகாக்க ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வு மையத்தில் மாணவர்களுக்கான இருக்கைகள் ஒதுக்கும் பணி நேற்றும், இன்றும் நடைபெற்றது.

மேலும், மாணவர்கள், தங்களது தேர்வு மையத்தை எளிதாகக் கண்டறியும் வகையில், ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் வெளியே உள்ள தகவல் பலகையில் அறை எண், ஹால் டிக்கெட் எண், தேர்வு தேதி உள்ளிட்டவை அடங்கிய அறிவிக்கைகள் ஒட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வின் போதும், காலை நேரத்தில் வினாத்தாள்கள் ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு தேர்வு மையங்களில் ஒப்படைக்கப்படும். தேர்வுக் கூடத்தில் மாணவர்களின் முறைகேடுகளை கண்காணிக்கவும், தடுக்கவும் 180 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் ஹால் டிக்கெட்டை எடுத்துச் செல்ல வேண்டுமெனவும், நடத்தை விதிகளை மீறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுத் தேர்வையொட்டி தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு தடையில்லா பேருந்து சேவை மற்றும் மின் விநியோகம் செய்து தரப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...