சாதி ஆவணக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் - உடுமலை சங்கரின் நினைவேந்தல் கூட்டத்தில் வலியுறுத்தல்

சாதி மறுப்பு திருமணத்தால் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் நினைவேந்தல் கூட்டம், உடுமலையில் நடைபெற்றது. தமிழகத்தில் சாதி ரீதியான ஆணவ கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குமரலிங்கத்தில் ஆணவக் கொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது.



இதில், சங்கரின் மனைவி கௌசல்யா, இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த கனகராஜ், தமிழ்ப்புலிகள் அமைப்பை சார்ந்த நாகை திருவள்ளுவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் இரா.விக்ரமன் உள்ளிட்டோர் பங்கேற்று சாதி ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டுவரவேண்டுமென வலியுறுத்தினர்.



நிகழ்ச்சியில் பேசிய விடுதலையில் சிறுத்தைகள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன், சாதி ஆணவ கொலைக்கு எதிராக சட்டங்கள் இல்லை என்பதாலேயே ஆணவ கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் கேட்கப்படுகிறது. இதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தாத போராட்டங்களே இல்லை. தொல்.திருமாவளவன் பேசாத பேச்சுக்களே இல்லை. ஆணவக் கொலைகளால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. சாதிய ஆணவப்படு கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்படவேண்டும், என்று வலியுறுத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...