12ம் வகுப்பு பொதுத்தேர்வு - வால்பாறையில் 481 மாணவ, மாணவியர் பங்கேற்பு

வால்பாறை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தூய இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் சோலையார் அணை மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வால்பாறையில் மொத்தம் 481 மாணவ-மாணவியர் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 12 ஆம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கியது. இதில் 481 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

வால்பாறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோலையார் அணை மேல்நிலைப்பள்ளி, அட்டகட்டி மேல்நிலைப்பள்ளி, தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூய இருதய மெட்ரிக் பள்ளி, பியூலா மெட்ரிக் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன.



இந்தப் பள்ளிகளிலிருந்து 481 மாணவ மாணவிகள் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.



வால்பாறை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் சோலையார் அணை மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு மையங்களில் பத்துக்கு மேற்பட்ட கண்காணிப்பாளர்களும், பறக்கும் படையினரும் தேர்வெழுதும் மாணவ-மாணவியர் முறைகேடுகளில் ஈடுபடாதவண்ணம் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...