கோவையில் போதை மாத்திரை விற்பனை - இளைஞரை கைது

கோவை போத்தனூர் பகுதியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட வெள்ளலூர் மகாலிங்கபுரத்தை சேர்ந்த சசிதரன் எனும் இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 அட்டைகளில் 88 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை போத்தனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் நேற்று மாலை அங்குள்ள கோணவாய்க்கால் பாளையம் டாஸ்மாக் கடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 10 அட்டைகளில் 88 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், அவர் வெள்ளலூர் மகாலிங்கபுரம், ராமசாமி நகரை சேர்ந்த பூபாலன் மகன் சசிதரன் (வயது 22) என்பது தெரியவந்தது. இவர் பிளம்பர் வேலை செய்து வருவதும், குடும்பத்தாரிடம் குடித்துவிட்டு தொடர்ந்து சண்டையிட்டு பிரச்சனை செய்வதையும் அவர் வாடிக்கையாக செய்துவருவதும் தெரியவந்தது.

இந்த நிலையில் போதை மாத்திரை விற்றதற்காக கைது செய்யப்பட்ட சசிதரன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...