மத்திய சிறை மைதானத்தில் சடலமாக தொங்கிய கர்நாடக இளைஞர் - போலீசார் விசாரணை

கோவை பார்கேட் பகுதியில் உள்ள மத்திய சிறைத் துறைக்கு சொந்தமான மைதானத்தில் உள்ள மரத்தில் கர்நாடக இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை பார்கேட் பகுதியில் உள்ள சிறைத்துறைக்கு சொந்தமான மைதானத்தில் அவ்வப்போது அரசு பொருட்காட்சிகள் நடைபெறும். தற்போது காலியாக உள்ள மைதானத்தின் ஒரு பகுதியில் இருந்த மரத்தில் தூக்கில் தொங்கியவாறு இளைஞர் சடலம் இருப்பதாக அவ்வழியாக சென்ற பொதுமக்கள், ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மரத்தில் தொங்கிய இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இது தொடர்பாக நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் கர்நாடகா மாநிலம் மாண்டியாவை சேர்ந்த சுகேஷ் (வயது25) என்பதும், வேலை தேடி அவர் கோவை வந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...