பொள்ளாச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 10 பவுன் நகை, பணம் கொள்ளை - விசாரணை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியை டெசந்தா மேரி என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி நகர் பகுதி ராஜமீல் பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியை டெசந்தா மேரி. இவர் கடந்த நாட்களுக்கு முன்பு வெளியில் சென்றவர் ஆழியார் அறிவு திருக்கோவிலில் தங்கி தியான பயிற்சியில் ஈடுபட்டு இருந்த நிலையில் நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார்.



அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த சுமார் பத்து சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.



இதையடுத்து, டெசந்தா மேரி பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.



அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த மேற்கு காவல் நிலைய போலீசார் தடயங்களை ஆய்வு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களை வைத்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...