பொள்ளாச்சி பேருந்து நிலைய மொட்டை மாடியிலிருந்து குதித்த இளைஞரால் பரபரப்பு!

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தின் மொட்டை மாடியில் இருந்து மதுபோதையில் கீழே குதித்து படுகாயமடைந்த ராமபட்டினத்தை சேர்ந்த ஜெயசூர்யா என்பவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பொள்ளாச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தின் மொட்டை மாடியில் இருந்து திடீரென ஒரு இளைஞர் கீழே குதித்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.



சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேற்கு காவல் நிலைய போலீசார், மதுபோதையில் படுகாயங்களுடன் இருந்த இளைஞரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.



மதுபோதையில் பேருந்து நிலையத்தின் மொட்டை மாடியில் இருந்து இளைஞர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் ராமபட்டினத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்கின்ற ஜெயசூர்யா (வயது19) என்பது தெரிய வந்தது.



எதற்காக மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...