காஸ் சிலிண்டர் விலையை கண்டித்து பொள்ளாச்சியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாடையில் சிலிண்டரை வைத்துக் கட்டியும், பட்டை, நாமம் போட்டும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: பொள்ளாச்சியில் காஸ் விலையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரக் கிளை சார்பில், காஸ் விலை உயர்வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும், காஸ் சிலிண்டருக்கு வழங்க வேண்டிய மானியத்தைச் சிறிது சிறிதாகக் குறைத்து, இப்போது மானியமே வருவதில்லை என்று கூறி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.



இதைத் தொடர்ந்து சிலிண்டருக்கு பட்டை நாமம் போட்டும், பாடைகட்டியும் நூதன முறையில் மத்திய அரசுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி நகரக் கட்சி கிளையில் உறுப்பினர் சசிதரன் தலைமை தாங்கினார்.



இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயச் சங்கம் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...