உடுமலையில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரம்!

உடுமலை நகராட்சியில் டெங்கு, மலேரியா, இன்ஃபுளுவென்சா உள்ளிட்ட நோய் பரவலை தடுக்கும் விதமாக, தங்கம்மாள் ஓடை மற்றும் யு.கே.சி நகர் பகுதிகளில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பி.டி. மருந்து 10 லிட்டருக்கு 250 எம்.எல் மருந்து கலந்து ட்ரோன் மூலம் தெளிக்கப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசுக்களை கட்டுப்படுத்த ட்ரோன்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கப்பட்டது.

கொசுக்களின் மூலம் பரவும் நோய்களாக டெங்கு காய்ச்சல், மலேரியா, வைரஸ் காய்ச்சல் மற்றும் இன்ஃப்ரின்சா பரவுதலை தடுக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.



நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர மன்ற தலைவர் அறிவுறுத்தலின்படி இன்று கொசுக்கள் உற்பத்தியாகும் பகுதியான தங்கம்மாள் ஓடை மற்றும் யு.கே.சி நகர் பகுதிகளில் கால்வாய்களில் உற்பத்தியாகும் கொசுக்களை கட்டுப்படுத்தும் பி.டி. மருந்து 10 லிட்டருக்கு 250 எம்.எல் மருந்து கலந்து ட்ரோன் எந்திரம் மூலம் தெளிக்கப்பட்டது.



கொசு ஒழிப்பு பணியாளர்கள் செல்ல இயலாத கால்வாய்கள் உள்ள இடங்களில் ட்ரோன்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கப்படுகிறது. கொசு ஒழிப்பு பணியில் 58 பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். நகரில் 33 வார்டுகளில் சிக்ஸ்டே பிளாக் என்ற முறையில் கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் கொசு ஓழிப்புபணிக்கு செல்ல இயலாத பகுதிகளில் இப்பணி இன்று முதல் அனைத்து கால்வாய்களிலும் மருந்து தெளிக்கப்படும் எனவும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இந்த நிகழ்வில் நகர மன்ற தலைவர் மத்தீன், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், நகர்மன்ற உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...