கோவையில் வடமாநில இளைஞர் முகத்தில் காயத்துடன் மர்ம மரணம் - போலீசார் விசாரணை!

பெரியநாயக்கன்பாளையம் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய்குமார் என்ற இளைஞர் முகத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே முகத்தில் காயங்களுடன் வடமாநில இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார் (31). இவர் வீரபாண்டி பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கூடலூர் கவுண்டம்பாளையம் பாரதி நகர் பகுதியில் முகத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.



இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெரியநாயக்கன்பாளையம் போலீசார், சஞ்சய் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலையா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் வடமாநிலத்தவர் குறித்தான வதந்திகள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், வடமாநில இளைஞர் மர்மமான முறையில் இறந்த கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...