கோவையில் தனியார் கல்லூரி பேருந்து மீது வேன் மோதி விபத்து - வேன் ஓட்டுநர் பலியான சோகம்!

கோவை மாதம்பட்டி அருகே தனியார் கல்லூரி பேருந்து மீது கார் மோதிய விபத்தில், காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஐடி நிறுவனத்திற்கு வாடகை வேன் ஓட்டி வந்த ராமலிங்கம்(30) என்பவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.


கோவை: மாதம்பட்டி அருகே தனியார் கல்லூரி பேருந்து மீது இகோ வேன் மோதி விபத்து, வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவை பூலுவப்பட்டியை சேர்ந்தவர் ராமலிங்கம் (30). இவர் ஐடி நிறுவனத்திற்கு வாடகை அடிப்படையில் வேன் ஓட்டி வந்தார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல சிறுவாணி சாலையில் ராமலிங்கம் காரில் வேலைக்குச் சென்றுள்ளார்.



அப்போது மாதம்பட்டி கருப்பசாமி தோட்டம் அருகே வந்த போது, ராமலிங்கம் முன்னே சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன், எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியதில், ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்து வந்த பேரூர் போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...