இரண்டு ஆண்டுகளில் காற்றாலைகள் மூலம் 20 ஆயிரம் மில்லியன் யூனிட் மின் உற்பத்தி

2022-23ம் நிதியாண்டிலும் தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி சிறப்பாக உள்ளது. இதுவரை 10 ஆயிரம் மில்லியன் யூனிட்டை கடந்துவிட்டது. மார்ச் இறுதிக்குள் 11 ஆயிரம் மில்லியன் யூனிட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.எனக் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: இரண்டு ஆண்டுகளில் காற்றாலைகள் மூலம் 20 ஆயிரம் மில்லியன் யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

அதிகரித்துவரும் மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் சூரியஒளி ஆற்றல் உற்பத்தியில் 4,500 மெகாவாட் மற்றும் காற்றாலை துறையில் 10 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகள் உள்ளன.

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக மின் உற்பத்தி சிறப்பாக உள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியக் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது, காற்றாலை சீசன் குறிப்பிட்ட ஏழு மாதங்கள் மட்டுமே இருந்தாலும் நிதியாண்டு அடிப்படையில் தான் மொத்த மின்உற்பத்தி கணக்கிடப்படுவது வழக்கம். கடந்த 2021-22 நிதியாண்டில் மொத்தம் 11 ஆயிரம் மில்லியன் யூனிட் அளவிலான மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டன.

2022-23ம் நிதியாண்டிலும் தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி சிறப்பாக உள்ளது. தற்போது வரை 10 ஆயிரம் மில்லியன் யூனிட்டை கடந்துவிட்டது. மார்ச் இறுதிக்குள் கடந்த நிதியாண்டு போல 11 ஆயிரம் மில்லியன் யூனிட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். மத்திய, மாநில அரசு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவது மிகவும் வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...