கோவை ஆட்சியரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 26வது வார்டு கவுன்சிலர் மனு!

பீளமேடு அருகேயுள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் சுரங்கப்பாதை அமைப்பது, PF திட்ட சாலை பணிகளை விரைவு படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி கோவை ஆட்சியரிடம் 26வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி மனு அளித்துள்ளார்.


கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சியின் 26வது வார்டு உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கோவை மாநகராட்சியின் 26 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சித்ரா வெள்ளியங்கிரி. இவர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார்.



அப்போது தங்களது வார்டில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, பீளமேடு பகுதி 26வது வார்டுக்கு உட்பட்ட ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் சுரங்கப்பாதை வேண்டி பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

இதேபோல், அந்த வார்டில் PF திட்ட சாலை பணிகள் நில எடுப்பு நடவடிக்கைக்கு பணிகளை வேகப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை நடைபெற்று வரும் மேம்பால பணிகளை வேகப்படுத்தி முடிக்க வேண்டும். சாலையின் இரு புறங்களிலும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நவீன கழிப்பறை அமைத்து தர வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...