ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு - கோவையில் முக்கிய குற்றவாளி கைது!

கோவை சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு வந்த பாபு என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தொடர்புடைய பாபு என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி மற்றும் இதர பொருட்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்வதும் மற்றும் மற்ற உபயோகங்களுக்குப் பயன்படுத்தப்படுவதும் முற்றிலுமாக தடுக்கப்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி உத்தரவின் பேரில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி, சேரன் மாநகர் அருகே 1,500 கிலோ ரேஷன் அரிசியை ஆம்னி வேனில் கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதில் பாபு என்பவருக்குத் தொடர்பு இருப்பதும், அரிசி கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரிய வந்தது. இந்நிலையில் குடிமைப் பொருள் வழங்கல் காவல் ஆய்வாளர் மேனகா தலைமையிலான தனிப்படையினர், இன்று பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...