ஜல்லிக்கட்டு குறித்த ஆங்கில புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளரும், அயலக தமிழர் நலவாரிய தலைவருமான கார்த்திகேய சிவ சேனாதிபதி ஜல்லிக்கட்டு போட்டியை மையமாக வைத்து எழுதிய Thunderous Run Bountiful Harvest எனும் ஆங்கில புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரர்கள் பெற்றுக் கொண்டனர்.


சென்னை: ஜல்லிக்கட்டு குறித்து கார்த்திகேய சிவ சேனாதிபதி எழுதிய Thunderous Run Bountiful Harvest என்ற ஆங்கில புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளரும், அயலக தமிழர் நல வாரிய தலைவருமான கார்த்திகேய சிவசேனாபதி ஜல்லிக்கட்டு விளையாட்டை ஆங்கிலத்தில் ஆவணப்படுத்தும் நோக்கில் "Thunderous Run Bountiful Harvest" என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். இந்த புத்தகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட தமிழக ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் புத்தகத்தை எழுதிய கார்த்திகேய சிவ சேனாதிபதி பேசுகையில், 2017ஆம் ஆண்டு தமிழகத்தில் மெரினா புரட்சியை தொடர்ந்து நாங்கள் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு கட்டங்களில் சட்ட சிக்கலை தீர்க்க வாதிடும் போது குதிரை பந்தயத்திற்கு இருப்பது போல் ஆங்கிலத்தில் ஜல்லிக்கட்டை பற்றிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பதை உணர்ந்தோம். எனவே அப்போது அதை தொகுக்கும் முயற்சியில் இறங்கினோம். இதில் என்னுடன் ரோஜா முத்தையா, இயக்குனர் சுந்தர் மற்றும் கட்டிடக்கலை வல்லுநர் கார்த்திக் ஆகியோரின் முயற்சியின் விளைவாக அறிவியல் மற்றும் தொன்மையான பல விவரங்களை இந்த புத்தகத்தில் தொகுத்துள்ளோம், என்றார்.

நிகழ்ச்சியில் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் பழ.செல்வகுமார், ரோஜா முத்தையா, நூலக இயக்குநர் சுந்தர்கணேசன், கட்டிடக்கலை வல்லுநர் கார்த்திக் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...