மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.9 லட்சம் மோசடி - போலீசார் விசாரணை

மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த கார் மெக்கானிக் அசோக்குமாரிடம் 9 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த பிரசாந்த் உத்தமன் என்ற நபரை கோவை போலீசார் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


கோவை: மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சார்ந்தவர் அசோக் குமார்(வயது30). இவர் கார் மெக்கானிக்காக ஷோரூம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு அறிமுகமான நபர் ஒருவர், பிரசாந்த் உத்தமன் என்ற நபரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். பிரசாந்த் உத்தமன் ஸ்கவுட் பிரிவில் மாநில அளவில் உயர் பொறுப்பில் இருப்பதாக தெரிவித்து அறிமுகப்படுத்திக்கொண்டதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் உள்ள துறை ஒன்றில் ஸ்கவுட் மாஸ்டர் வேலை காலியாக இருப்பதாகவும், அதனை வாங்கி தருவதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார். இதற்காக பணம் செலவாகும் என்று தெரிவித்த பிரசாந்த் உத்தமன், அசோக் குமாரிடம் இருந்து 2020 ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது சிறுக சிறுக 9 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் ஸ்கவுட் மாஸ்டர் வேலை கிடைத்தது போன்ற போலி பணி ஆணையை பிரசாந்த் உத்தமன் ஏற்பாடு செய்து, அசோக்குமாரிடம் கொடுத்துள்ளார். பின்னர் அந்த பணி ஆணை போலி என்பது தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்த அசோக்குமார், சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பிரசாந்த் உத்தமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...