கோவையில் பூட்டியிருந்த வீட்டில் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

கோவை பீளமேட்டில் கதிரேசன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் தங்க நகை, 1.5 லட்சம் ரூபாய் பணம், வெள்ளி பொருட்கள் மற்றும் அமெரிக்க டாலர்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை பீளமேடு அருகேயுள்ள சேரன் மாநகர் மெளனசாமி நகரைச் சேர்ந்தவர் கதிரேசன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவிஜெயராணி. இவர் கடந்த 9-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு, அதேப் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். நேற்று காலை மீண்டும் அவர் கோவைக்கு திரும்பினார்.

வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் கலைந்து கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.1.50 லட்சம் தொகை, 19 பவுன் நகை, 4,800 எண்ணிக்கையிலான அமெரிக்க டாலர்கள், 160 கிராம் வெள்ளிப் பொருட்கள் ஆகியவை கொள்ளைபோயிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் அளித்த புகாரின் அடிப்படையில், பீளமேடு போலீஸார் வழக்குப்பதிவு கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களைத் தேடிவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...