கோவை அருகே கல்லால் தாக்கப்பட்ட தனியார் நிறுவன ஊழியர் - 5 பேர் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தனியார் நிறுவன ஊழியர் ஆல்பின் அகஸ்டின் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டு, கல்லால் தாக்கி, நிறுவனத்தின் ஜீப்பின் கண்ணாடியின் உடைத்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் சங்கரங்குளத்தை சேர்ந்தவர் ஆல்பின் அகஸ்டின்(வயது 23). கிணத்துக்க டவு அருகே கொண்டம்பட்டிபுத்தூர் அம்மன் வீதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.

மேலும், கொண்டம்பட்டியில் இருந்து அரசம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ஆல்பின் அகஸ்டின் நேற்று முன்தினம் இரவில் கொண்டம்பட்டியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். பின்னர் பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.



அப்போது கொண்டம்பட்டி காமாச்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்த காவியபிரபு(வயது23), வீரகுமார் (வயது23), விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த மணிகண் டன் (வயது27), பெரிய வீதியை சேர்ந்த பிரபாகரன் (வயது20), நடராஜன் (வயது33) ஆகியோர் ஆல்பின் அகஸ்டினிடம் தகராறில் ஈடுபட்டதோடு, அவரை கல்லால் தாக்கினர்.



மேலும், அங்கிருந்த தனியார் நிறுவன ஜீப்பின் முன்பக்க கண்ணாடியையும் உடைத்தனர். இனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்துசம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக் டர் ஜெகதீசன் மற்றும் போலீசார்தகராறில் ஈடுபட்ட வீரகுமார், காவிய பிரபு, மணிகண்டன், பிரபாகரன், நடராஜன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...