கிணத்துடக்கடவில் வி.ஏ.ஓ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம்!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு தொகையை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிணத்துக்கடவில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: தமிழ்நாடு கிராமநிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிணத்துக்கடவு கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் வாசுதேவ் தலைமை வகித்தார். கேசவமூர்த்தி வரவேற்று பேசினார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு தொகையை மீண்டும் வழங்க வேண்டும், கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், கிணத்துக்கடவு கிராம நிர்வாக அலுவலர் சங்க செயலாளர் ஜெகதீஷ் குமார், பொருளாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...