கோவையில் வீட்டில் புகுந்து கொள்ளை முயற்சி - வீட்டின் உரிமையாளரிடம் வசமாக சிக்கிய திருடன்!

கோவை சிங்கநல்லூரில் வீட்டில் நுழைந்து ரொக்கபணத்தை திருட முயன்ற சஞ்சய் ராஜ் என்பவரை, வீட்டின் உரிமையாளர் ஜீவானந்தம் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.


கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். காசாளராக பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் இவர் தனது வீட்டின் அருகேஉறவினருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது வீட்டினுள் ஏதோ உருட்டல் சத்தம் கேட்டுள்ளது. உள்ளே சென்று பார்த்தபொழுது இளைஞர் ஒருவர் உலாவுவது தெரியவந்தது.

வீட்டில் பணம், மணி பர்ஸ், டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்டவற்றை ஒவ்வொன்றாக அந்த நபர் எடுத்துக் கொண்டிருந்தார். அந்த நபரை உடன் பேசிக் கொண்டிருந்த உறவினர்கள் உதவியுடன் ஜீவானந்தம் கையும் களவுமாகப் பிடித்தார். இது தொடர்பாகசிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு அவர் புகார் அளித்தார்.

ஜீவானந்தம் தனது உறவினர்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில், வீட்டில் கொள்ளை அடிக்க முற்பட்ட நபர் சஞ்சய் ராஜ் என்பது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார், சஞ்சய்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...