கோவையில் கல்லூரி மாணவர்களுக்கான கல்விக்கடன் முகாம் - பிரபல வங்கிகள் பங்கேற்பு

கோவையில் கல்லூரி மாணவர்களுக்காக நடந்த கல்விக் கடன் முகாமினை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடக்கி வைத்தார். ஐஓபி, எச்.டி.எப்.சி, டி.எம்.பி, பேங்க் ஆப் பரோடா, ஆக்ஸிஸ் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஃபெடரல் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் பங்கேற்று மாணவர்களுக்கு கடனுதவி வழங்கின.


கோவை: கோவை மாவட்டத்தில் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களில் கல்வி கடன் தேவைப்படும் மாணவர்களுக்காக ஒரு நாள் கல்விக்கடன் முகாம் இன்று நடைபெறுகிறது.

கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்றுவரும் இந்த முகாமில் மாவட்ட முன்னோடி வங்கிகள் கடன் உதவிகளை வழங்குவதற்காக பங்கேற்றுள்ளன. இதில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் கல்வி கடன் பெறுவதற்காக தெரிவிக்கப்பட்டுள்ள ஆவணங்களை கொண்டு வந்து விண்ணப்பித்து வருகின்றனர்.



முகாமினை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து மாணவர்களுடன் பேசினார். பின்னர், முகாமினையும் ஆட்சியர் பார்வையிட்டார்.



ஐஓபி, எச்.டி.எப்.சி, டி.எம்.பி, பேங்க் ஆப் பரோடா, ஆக்ஸிஸ் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஃபெடரல் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் கடன் உதவிகளை வழங்குகின்றன. இந்த முகாம்கள் மூலம் 350 கோடி வரை கடன் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...