பல்லடத்தில் மதுபோதையில் மயங்கிக் கிடந்த வி.ஏ.ஓ - வைரலாகும் புகைப்படங்களால் பரபரப்பு!

பணிநேரத்தில் மதுபோதையில் இருந்த திருப்பூர் மாவட்டம் மாதப்பூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் ஜெய்சிங் தெரிவித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் மாதப்பூரில் கூடுதல் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ஜெகநாதன். நேற்று மதியம் மாதப்பூர் ஊராட்சி துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் என்பவர் சாலை பிரச்சனை குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதனிடம் பேச அவரை தொடர்பு கொண்டார்.



அப்போது பாலசுப்பிரமணியத்திடம் மதுபோதையில் இருந்த வி.ஏ.ஓ ஜெகநாதன் மரியாதை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதனை பாலசுப்பிரமணியம் பல இடங்களில் தேடியுள்ளார். அப்போது, ஒரு வீட்டின் அருகே ஜெகநாதன் மதுபோதையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். பணி நேரத்தில் மது அருந்திவிட்டு மயங்கி கிடந்த ஜெகநாதன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து வட்டாட்சியர் ஜெய்சிங் சிவகுமாரிடம் கேட்டபோது, பணி நேரத்தில் மது போதையில் இருந்த ஜெகநாதன் மீது மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பணி நேரத்தில் மது போதையில் மயங்கி கிடந்த கிராம நிர்வாக அலுவலரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...