கோவை ஒண்டிபுதூர் அரசு மகளிர் காப்பகத்தில் ஆள்கடத்தல் குறித்து பெண்களுக்கு சட்ட விழிப்புணர்வு!

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஒண்டிப்புதூரில் உள்ள மகளிர் காப்பகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில், சார்பு நிதிபதி K.S.S.சிவா பங்கேற்று ஆள்கடத்தல் குறித்து பெண்களிடையே ஆள்கடத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


கோவை: கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரில் உள்ள மகளிர் காப்பகத்தில், சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஆட்கடத்தல் குறித்த சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் அமைந்துள்ள அரசு மகளிர் காப்பகத்தில் ஆள்கடத்தல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த குழுவின் கோவை மாவட்ட செயலாளரும், சார்பு நீதிபதியுமான K.S.S.சிவா, மகளிர் காப்பகத்தில் உள்ள பெண்களிடையே ஆள் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் அந்த காப்பகத்தில் தேவையான வசதிகள் உரிய முறையில் வழங்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் மகளிர் காப்பக கண்காணிப்பாளர் சிவகாமி மற்றும் காப்பக ஊழியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...