ஆர்.டி.ஓ சேவை கட்டண உயர்வை கண்டித்து சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மனு

ஆர்.டி.ஓ சேவை கட்டணங்களை உயர்த்தி உள்ளதற்கு கண்டனம் தெரிவித்தும் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மனு அளித்தனர்.



வட்டார போக்குவரத்து துறையின் பதிவு கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைக்கட்டணங்களை உயர்த்தி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு நாடு முழுவதும் வாகன ஓட்டிகளிடையே கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் இந்த கட்டணங்கள் தங்களது வாழ்வாதாரத்தை பாதிப்பதாக கூறி ஆட்டோ தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் சுமார் 200 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ள கட்டணங்களால் ஏற்கனவே பொருளாதார சுமையில் தவித்து வரும் ஆட்டோ ஓட்டுனர்கள் மேலும் இன்னலுக்கு ஆளாகும் நிலை இருப்பதாக தெரிவித்திருந்தனர். மேலும் மாவட்ட சூழலுக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை நிர்ணயிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் உடனடியாக ஆட்டோ சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவில் கட்டணங்களை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் அம்மனுவில் கோரிக்கை விடப்பட்டிருந்தது. மனு அளிக்க சுமார் 300க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் முன்பு குவிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...