கோவையில் சட்டக்கல்லூரி மாணவரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் - காவல் ஆணையரிடம் மாணவர்கள் மனு!

கோவை ரயில் நிலையம் அருகே சட்டக்கல்லூரி மாணவர் மீது ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து சட்ட கல்லூரி மாணவர்கள், மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனுவை அளித்துள்ளனர்.


கோவை: கோவை ரயில் நிலையம் அருகே சட்டக்கல்லூரி மாணவரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சட்ட கல்லூரி மாணவர்கள் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் கோவை வடவள்ளி பகுதியில் தங்கி மருதமலை சாலையில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். மேலும் தற்போது வருவாய்க்காக பகுதி நேரமாக இருசக்கர வாகன டாக்சி (Rapido) ஓட்டி வருகிறார்.

இந்நிலையில் நேற்றிரவு கோவை ரயில் நிலையம் அருகே வாடிக்கையாளர் ஒருவரை அழைக்க வந்தபோது, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் ராஜாவிடம் தகாத வார்த்தைகளில் பேசி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் ராஜாவை சூழ்ந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சட்டக் கல்லூரி மாணவர் ராஜா, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.



இந்நிலையில் சட்டக்கல்லூரி மாணவரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் சுமார் 60க்கும் மேற்பட்டோர், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து விசாரித்த காவல் ஆணையர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...