உடுமலை அருகே அமணலிங்கேஸ்வரர் கோவிலில் குரங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு - பக்தர்கள் அச்சம்!

உடுமலை அடுத்த திருமூர்த்திமலை அருகேயுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் திருமூர்த்தி அணைக்கு வருபவர்களை குரங்குகள் துரத்தும் சம்பவங்களால் அச்சமடைந்த சுற்றுலா பயணிகள், குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் அருகே பக்தர்களை துரத்தும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

மலை அடிவாரத்தில் இருந்து சற்று உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அது தவிர கோவிலுக்கு வரும் வழியில் படகு இல்லம், சிறுவர்பூங்கா, நீச்சல் குளம், திருமூர்த்தி அணை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. அவற்றை பார்வையிடவும் அருவியில் குளித்து மகிழவும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர். இதனால் உடுமலை பகுதியின் சிறந்த சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக திருமூர்த்திமலை விளங்கி வருகிறது.



கோவில் வனப்பகுதியின் அடிவாரத்தில் உள்ளதால் அங்கு ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன. அவை மரத்துக்கு மரம் தாவுவது, தண்ணீரில் குதித்து நீச்சல் அடிப்பது, அங்கும் இங்கும் ஓடும் குரங்கு சேட்டையை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.



குறிப்பாக குரங்குகளை பார்க்கும் குழந்தைகளின் குதூகுலத்திற்கு அளவே இல்லை. இதனால் அவர்களும் மனம் மகிழ்ந்து கொண்டு வந்த உணவுகளை குரங்குகளுக்கு அளித்து வந்தனர்.



இந்த சூழலில் கோவில் பகுதியில் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் நடமாட்டம் அதிகமாகஉள்ளது. குரங்குகள் உணவுகளை ரூசி பார்த்த நிலையில் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் உணவு பொருட்கள் அடங்கிய பிடுங்க வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.



ஒரு சில நேரத்தில் உணவு தரவில்லை என்றால் குரங்குகள் துரத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதன் காரணமாக வனத்துறையினர் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டுமென சுற்றுலா பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...