கோவையில் வடமாநில தொழிலாளர் கொலை - 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது!

கோவையில் கள்ளக்காதல் விவகாரத்தில் வடமாநில தொழிலாளர் சஞ்சய் சவுத்ரியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளான முகேஷ் ஷானி, தேவா ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.


கோவை: கள்ளக்காதல் விவகாரத்தில் வடமாநில தொழிலாளரை கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய சரகத்தில் கூடலூர் கவுண்டம்பாளையம் - கட்டாஞ்சி மலை செல்லும் வழியில் பாரதி நகரில் உள்ள ஒரு தனியார் இடத்தில் சுமார் 38 வயது மதிக்கத்தக்க நபர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இறந்து கிடந்த நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் சவுத்ரி மகன் சஞ்சய் சவுத்ரி என்பதும், பெரியநாயக்கன்பாளையம் அருகிலுள்ள மத்தம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

சஞ்சய் சவுத்ரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையில், ஆறு தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், இறந்து போன சஞ்சய் சவுத்ரியின் மனைவிக்கும், சித்தப்பா மகனான முகேஷ் ஷானிக்கு (34) தொடர்பு ஏற்பட்டு கடந்த ஒருவருடமாக அவரது மனைவி முகேஷ் ஷானியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் சஞ்சய் சவுத்ரி அவ்வப்போது சென்று தன் மனைவியை தன்னுடன் வருமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த முகேஷ் ஷானி, தனது நண்பர் தேவா என்ற குபேந்திரன்(29) என்பவருடன் சேர்ந்து சஞ்சய் சவுத்ரியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.

சம்பவத்தன்று சஞ்சய் சவுத்ரியை தனியாக அழைத்து வந்து முன்று பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது சஞ்சய் சவுத்ரிக்கும், முகேஷ் ஷானிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முகேஷ் ஷானி, சஞ்சய் சவுத்ரியைகடுமையாகத் தாக்கி கைலியால் சஞ்சய் சவுத்ரியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

இதற்கு தேவா உதவி செய்துள்ளார். கொலை செய்த இருவரையும் துரிதமாக செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள் கைது செய்த தனிப்படையினரைக் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...