கூடலூரில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் - உற்சாகமாக பங்கேற்ற கோவை கல்லூரி மாணவிகள்!

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட தெற்குபாளையத்தில் கடந்த மார்ச் 7முதல் 13 வரை நடைபெற்ற நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில், கோவையை சேர்ந்த அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர். மேலும் இறுதி நாள் நிகழ்வில் அங்கன்வாடி மையத்திற்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட முகாமில்கோவையை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர்.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தெற்குப்பாளையம் பகுதியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம், உள்துறை வடிவமைப்பு, மேலாண்மை துறை, உணவு சேவை மேலாண்மை மற்றும் உணவு முறை துறை குழு எண் 1-ன் சார்பில் கடந்த மார்ச் 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெற்றது.



இந்த சிறப்பு முகாமில், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சக்திதேவி மற்றும் முனைவர் சு.கார்த்திகா ஆகியோருடன் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். வீட்டுக் கணக்கெடுப்பு, யோகா பற்றிய விழிப்புணர்வு, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கான கோலப்போட்டி, சமையல் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளும் நடத்தப்பட்டது.



மேலும் பூங்கா சுத்தம் செய்தல், வீட்டுத் தோட்டம் அமைத்தல், குழந்தைகள் மையத்திற்கு விளக்கப்படம் தயாரித்தல், சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டுப் போட்டிகள், சிறுசேமிப்பு மற்றும் சுயதொழில் பற்றிய விழிப்புணர்வு ஆகியவை சிறப்பாக நடத்தப்பட்டன.

குறிப்பாக ஊர் மக்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமில் பொதுநலப் பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, கண் பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மற்றும் உணவு முறை ஆலோசனை வழங்குதல் ஆகியவை மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேலான கிராம மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



தெற்குப்பாளையம் அடுத்த கென்னடி பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நீர் சேகரிப்பு மற்றும் தூய்மை இந்தியா பற்றிய விழிப்புணர்வு பேரணியும் மாணவிகளால் நடத்தப்பட்டது.



தொடர்ந்து இறுதி நாள் நிகழ்ச்சியில் கூடலூர் நகராட்சித் தலைவர் அறிவரசு கலந்து நாட்டு நலத்திட்ட மாணவிகளை வாழ்த்திப் பேசினார். மேலும் நாடு நலப்பணி திட்ட மாணவிகள் அங்கன்வாடி மையத்திற்கு பீரோ, நோட்டு புத்தகம், எழுது பொருட்கள், பக்கெட் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்களான முருகானந்தம் மற்றும் கீர்த்தனா உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...