மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது..! - கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தகவல்

கோவை ராமநாதபுரம் பகுதியில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் கண்காட்சியை திறந்து வைத்து பேசிய எம்எல்ஏ வானதி சீனிவாசன், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாகவும், கேஸ் விலை உயர்வால் பாதிப்பை குறைக்க மானியம் வழங்குவதாக தெரிவித்தார்.



கோவை: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை பாதிப்பை குறைக்க மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது என, கோவை தெற்கு எம்.எல்.ஏவும், பாஜக மகளிரணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டம் ராமநாதபுரம் அருகே மத்திய தகவல் ஒளிபரப்பு துறை சார்பில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் என்ற கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.



இன்று முதல் 21ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

இதனை பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,



சமூகம் அறியாமல் இருக்கக்கூடிய சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றி தெரிந்து கொள்வதற்காக இது போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வடமாநில தொழிலாளர்களின் மீது தாக்குதல் நடத்துவது யாராக இருந்தாலும் சட்டத்தின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டில் சாதி, மத ரீதியிலான பாகுபாடு எங்கும் இருக்கக் கூடாது. நேரடியாக பாதிக்கப்பட்ட வட மாநில தொழிலாளர்களை சந்திக்க இருக்கிறேன். நாட்டில் உள்ள எந்த மக்களும் வேறுபாட்டின் அடிப்படையில் பாதிக்கப்பட கூடாது.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை வாய்ப்பு வரும் போதெல்லாம் குறைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் பாதிப்பு பெரியதாக இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.

தமிழகத்தில் அனைத்து மத்திய அரசு திட்டங்களும் செயல்படுத்தப்படுவதாகவும் ஆனால் மத்திய மத்திய அரசின் திட்டங்கள் தான் என்று பெயர் வெளியே வராத வகையில் தமிழக அரசு அதனை தடுக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்வில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...