சூலூரில் பல லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் - ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு!

கோவை சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கோவை சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பட்டினம், பீடம்பள்ளி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அதன்படி கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் 69 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை உர தயாரிப்பு கூடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து குப்பைகள் பிரித்தெடுக்கும் முறை மற்றும் உர தயாரிப்பு குறித்துக் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக பங்களிப்புடன் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு அடுக்கு பள்ளி வகுப்பறை கட்டிடம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டார்.



மேலும் பட்டினம் தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளில் கற்றல் திறன் குறித்து குழந்தைகளிடம் கேட்டறிந்தார்.



அதனைத் தொடர்ந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் உபகரணங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.

தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் 87,500 மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள வெங்காய சேமிப்பு கிடங்கை பார்வையிட்டு விவசாயிகளிடம் அதன் பயன்கள் குறித்துக் கேட்டறிந்தார்.



அதனைத் தொடர்ந்து பீடம்பள்ளி ஊராட்சியில் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அங்கு பணியாற்றி வரும் பணியாளர்களிடம் கேட்டறிந்து பயனாளிகளுக்கு விரைவாக உரிய நேரத்தில் மருத்துவ சேவைகளை வழங்க உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 3.60 லட்சம் மதிப்பில் பாப்பம்பட்டி மெயின் ரோடு முதல் அதிர்ஷ்ட கார்டன் வரை சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியினையும் அம்மன் குளம் கோவில் நிலத்தில் 20 ஏக்கர் மியாவாக்கி முறையில் மூலிகை மரங்கள் கொண்ட அடர்வனம் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...