கோவையில் காட்மா சங்கத்தின்‌ பொதுக்குழு கூட்டம்‌ - முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

கோவை காட்மா சங்கத்தின்‌ பொதுக்குழு கூட்டம்‌ இன்று காலை 10 மணி அளவில்‌, கணபதி, வாணியர்‌ சேவா சங்கம்‌ திருமண மண்டபத்தில்‌ காட்மா சங்க தலைவர்‌ சிவக்குமார்‌ தலைமையிலும்‌, பொதுச்செயலாளர்‌ செல்வராஜ்‌, இணை தலைவர்‌ மகேஸ்வரன்‌ ஆகியோர்‌ முன்னிலையிலும்‌ நடைபெற்றது.


கோவை: காட்மா சங்கத்தின்‌ பொதுக்குழு கூட்டம்‌ கணபதி, வாணியர்‌ சேவா சங்கம்‌ திருமண மண்டபத்தில்‌ நடைபெற்றது.

கோவை காட்மா சங்கத்தின்‌ பொதுக்குழு கூட்டம்‌ இன்று காலை 10 மணி அளவில்‌ கணபதி, வாணியர்‌ சேவா சங்கம்‌ திருமண மண்டபத்தில்‌ காட்மா சங்க தலைவர்‌ சிவக்குமார்‌ தலைமையிலும்‌, பொதுச்செயலாளர்‌ செல்வராஜ்‌, இணை தலைவர்‌ மகேஸ்வரன்‌ ஆகியோர்‌ முன்னிலையிலும்‌ நடைபெற்றது.



இக்கூட்டத்தில்‌ காட்மா சங்க பொருளாளர்‌ நடராஜன்‌, துணை தலைவர்கள், புவியரசு, சோமசுந்தரம்‌, செயலாளர்கள்‌ கோல்டன்‌ பாலு, பாலன்‌, சுதர்சன்‌ மற்றும்‌ கெளரவ ஆலோசகர்‌ முத்துசாமி, ஆகியோர்‌ பங்கேற்றனர்‌. இக்கூட்டத்தில்‌ மத்திய மற்றும்‌ மாநில அரசுகளை வேண்டி பின்வரும்‌ தீர்மானங்கள்‌ நிறைவேற்றப்பட்டன.



மாநில அரசிற்கான தீர்மானங்கள்‌:

சிட்கோ விதிகளின்படி தொழிற்பூங்காக்களை அமைக்க குறைந்தபட்ச நில அளவு 10 ஏக்கர்‌ என்ற விதி இருக்கிறது. ஆனால்‌ குடிசைத்‌ தொழில்‌ மற்றும்‌ குறுந்தொழில்‌ முனைவோர்களுக்கு உதவும்‌ வகையில்‌, குறுந்தொழிற்பேட்டை அமைப்பதற்கான குறைந்தபட்ச நில அளவை 2.0 ஏக்கர்‌ என மாற்றி சட்டத் திருத்தம்‌ கொண்டு வந்து உதவ வேண்டும்‌.

தொழிற்பூங்காவின்‌ உட்கட்டமைப்பு அமைப்பதற்கு ஆகும்‌ செலவில்‌ அதிகபட்சமாக 75 சதவீதம்‌ அதாவது 15 கோடி ரூபாய்‌ வரை மானியமாக வழங்கப்படும்‌ என்ற விதி இருக்கிறது. இவ்விதியில்‌ மாற்றம்‌ செய்து தொழிற்பேட்டைகள்‌ அமைக்கப்படும்‌ பொழுது 100 சதவீதம்‌ மானியம்‌ வழங்கி, இதுவரை தமது சொந்த இடத்தில்‌ தொழிற்கூடங்கள்‌ அமைக்க இயலாத குறுந்தொழில்‌ மற்றும்‌ குடிசை தொழில்‌ முனைவோர்‌, மாநகர பகுதியிலிருந்து புறநகர்‌ பகுதிகளுக்கு தங்களின்‌ தொழிற்கூடங்களை மாற்றி, தங்களுக்குச் சொந்தமான இடத்தில்‌ தொழிற்கூடங்களை அமைத்துக்‌ கொண்டு, தங்கள்‌ தொழிலை தொடர்ந்து நடத்த உதவ வேண்டும்‌.

தனியார்‌ அமைப்புகள்‌ சார்பில்‌ தொழிற்பேட்டைகள்‌ அமைக்கப்படும்‌ பணிகள்‌ நடந்தாலும்‌, கோவை மாவட்டம்‌ முழுவதும்‌ தமிழ்நாடு அரசு சார்பாக புதிதாக தொழிற்பேட்டைகளை விரைந்து அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்‌.

தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌ குறுந்தொழில்‌ வளர்ச்சி வங்கி என்ற ஒரு வங்கி புதிதாக துவங்கப்பட்டு, அதன்‌ மூலம்‌ குறுந்தொழில்‌ மற்றும்‌ குடிசைத்‌ தொழில்‌ முனைவோர்களுக்கு குறைந்த வட்டியில்‌ கடன்‌ உதவி அளித்து உதவ வேண்டும்‌.

அண்மையில்‌ உயர்த்தப்பட்ட மின்சார நிலை கட்டணம்‌ மற்றும்‌ உச்சபட்ச நேர பயன்பாட்டுக் கட்டணம்‌ ஆகியவை தொழில்‌ முனைவோர்களுக்கு மிகுந்த நெருக்கடியை தரக்கூடியதாக இருக்கிறது. யூனிட்டிற்க்கான மின்‌ பயன்பாட்டு கட்டணம்‌ உயர்த்தப்பட்டது ஏற்றுக் கொள்ளதக்கதாக இருந்தாலும்‌ கூட, நிலை கட்டணம்‌ மற்றும்‌ உச்சபட்ச நேர மின்‌ பயன்பாட்டுக் கட்டணம்‌ ஆகியவற்றை குறைத்து மீண்டும்‌ பழைய அளவிற்கே மாற்றி அளித்து உதவ வேண்டும்‌ என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில்‌ காட்மா சங்க பகுதி செயலாளர்கள்‌ ஆதிஸ்வரன்‌, ராஜ்‌, சோமசுந்தரம்‌, ராதாகிருஷ்ணன்‌, மலைச்சாமி, ராஜாங்கம்‌, சாமிநாதன்‌, சரவணசுந்தரம்‌,சக்திவேல்‌, (நாகராஜன்‌, ஈ.சண்முகம்‌, சதாசிவம்‌ செல்வராஜ்‌, மாரியப்பன்‌, பாபு, சிவக்குமார்‌,பூபதி, சுப்பிரமணி, சண்முகவடிவேல்‌, சிவமணி, ராமகிருஷ்ணன்‌ பகுதி துணைசெயலாளர்கள்‌, நிர்வாக குழு உறுப்பினர்கள்‌ மற்றும்‌ பொதுக்குழு உறுப்பினர்கள்‌ உட்பட 200-க்கும்‌ மேற்பட்டோர்‌ பங்கேற்றனர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...