சத்துமாத்திரை சாப்பிட்ட விவகாரம் - மாணவிகள் உடல்நலம் தேறி வருவதாக கோவை அரசு மருத்துவர்கள் தகவல்!

அதிக சத்து மாத்திரைகள் சாப்பிட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூன்று மாணவிகள் ஓரளவு நலமடைந்து பொதுசிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டனர். தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்ப்டடு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.



கோவை: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள உருதுப் பள்ளியில் சத்து மாத்திரையை அதிக எண்ணிக்கையில் சாப்பிட்ட 4 மாணவிகள் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.



அதில் 13 வயது மாணவிக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் செல்லும் வழியில் சேலம் அருகே உயிரிழந்தார்.

இந்த நிலையிலே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், மூன்று மாணவிகள் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் மூன்று பேரும் ஓரளவு நலமடைந்து பொது சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.

அந்த மாணவிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அரசு மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் தெரிவித்த நிலையில், சிறுமிகள் உடல் நலம் தேறியுள்ளதாகவும், விரைவில் வீட்டிற்கு அனுப்ப வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...