கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீர்வளம், மண்வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகக் கூறி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கோவை மாவட்டம், சூலூர் வட்டத்தில் பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தின் ஊராழி குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கவும், குட்டையை ஆழப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராகக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இன்று அப்பகுதியில் உள்ள ஊராழி குட்டையைத் தூர்வாரி ஆழப்படுத்தும் திட்டத்தைத் தொடங்கும் பொருட்டு, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் தலைமையில் பூமி பூஜை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஏற்கனவே இத்திட்டத்திற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நாகம நாயக்கன் பாளையம் மக்கள், இன்று திட்டத்திற்குப் பூமி பூஜை செய்து தொடங்கி வைக்க வந்த சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பித் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில், எம்எல்ஏ தரப்பு மற்றும் போராடும் மக்கள் என இரு தரப்பினர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கூட்டத்தை கட்டுப்படுத்தி இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதுகுறித்துப் பேசிய சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார்,
பல ஆண்டுகளாக குட்டைகளைதூர்வாரி ஆழப்படுத்தாததால், அங்கு போதிய அளவு நீர் தேங்குவதில்லை என்றும், குட்டையைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார். எனவே, குட்டையைத் தூர்வாரி, நீர்வழிப் பாதையை சீரமைத்தால் மட்டுமே அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் எனக் கூறினார்.

மேலும், தனியார் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) நிதி மூலம் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் குட்டையில் தேக்கி வைப்பதில் தவறில்லை என்றும் அவர் தெரிவித்தார். பிற நாடுகளிலும் இதுபோன்ற சுத்திகரிக்கப்பட்ட நீரை மக்கள் மினரல் வாட்டராகப் பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், தேவையற்ற வதந்திகளை நம்பிப் பொதுமக்களில் சிலர்ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறினார்.
இதையடுத்து, நாகம நாயக்கன் பாளையம் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், கிராமத்தில் சுமார் 2,000 பேர் வசித்து வருகின்றனர் என்றும், இக்கிராமத்தில் அமைந்துள்ள ஊராழி குட்டை சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மழைக்காலங்களில் மழைநீர் சேகரமாகி நிரம்பும் இந்தக் குட்டை, கிராம மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது. குட்டையில் மூன்று ஆழ்துளைக் கிணறுகளும், அதைச் சுற்றி ஏழு ஆழ்துளைக் கிணறுகளும் உள்ளன. இவை அனைத்தும் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகின்றன.
இந்நிலையில், கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள காடுகுட்டை பகுதிக்குக் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கொண்டு செல்லும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது அந்த நீரை நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டைக்கும் கொண்டு வந்து நிரப்ப முயற்சி நடைபெறுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.