ஆயுதங்களுடன் டிக் டாக் வீடியோ வெளியிட்ட தமன்னா - போலீசார் தீவிர விசாரணை

ஆயுதங்களுடன் டிக் டாக் வீடியோ வெளியிட்டு, சங்ககிரியில் மறைந்திருந்த தமன்னாவை போலீசார் கைது செய்து, கோவைக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். தமன்னா மீது ஆயுத சட்டம் உட்பட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவையில் டிக் டாக் ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டு அச்சுறுத்தினர். இந்த நிலையிலே டிக் டாக் வீடியோக்களை கைப்பற்றிய காவல் துறையினர் அவர்களை கைது செய்ய திட்டமிட்டனர். அதன் அடிப்படையில், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவுக்கிணங்க, தனிப்படை போலீசார் ஒரே நாளில் பத்துக்கு மேற்பட்ட டிக் டாக் ரவுடிகள் உட்பட 48 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டு இருந்த விக்கு மற்றும் தமன்னா மீது வழக்கு பதிந்த போலீசார் அவர்களை தனிப்படை அமைத்து தேடினர். சங்ககிரியில் இருந்த தமன்னாவை பிடித்த போலீஸார், கோவை அழைத்து வந்துவிசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மீது ஆயுதசட்டம் உட்பட இரு பிரிவிகளில் வழக்கு பதிவு செய்த தனிப்படை போலீசார், அவரை பீளமேடு காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த நிலையில், தமன்னா சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். பயங்கர ஆயுதங்களுடன் வெளியிட்ட வீடியோ குறித்து பேசி இருந்த தமன்னா, இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த வீடியோவை வெளியிட்டு இருந்ததாகவும், தற்போது திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, அவர் தற்பொழுது கர்ப்பிணியாக இருப்பதாகவும் அந்த வீடியோவில் தமன்னா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...