ஆஸ்கர் விருது புகழ் முதுமலை தம்பதி பொம்மன் - பெள்ளி - நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் முதல்வர்!

ஆஸ்கர் விருதுபெற்ற 'The Elephant Wishperers' ஆவணப் படத்தில் இடம்பெற்ற முதுமலையைச் சேர்ந்த பொம்மன் - பெள்ளி தம்பதி இன்று சென்னையில் முதமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் அளித்தார்.



கோவை: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றுவரும் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், 'The Elephant Wishperers' ஆவணப் படம் ஆஸ்கர் விருது வென்றது. முதுமலையில் கைவிடப்பட்ட யானைக் குட்டிகளை வளர்க்கும் முதுமலையைச் சேர்ந்த பொம்மன் - பெள்ளி தம்பதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படம் ஆஸ்கர் விருது பெற்றதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.



இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பொம்மன்-பெள்ளி தம்பதி நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி முதலமைச்சர் வாழ்த்துத் தெரிவித்தார்.

பின்னர், ஆஸ்கர் விருதுபெற்ற மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில், தமிழக அரசின் சார்பில் முதுமலையில் உள்ள தெப்பக்காடு மற்றும் ஆனைமலையில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் பணியாற்றும், 91 பணியாளர்களுக்கும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், தம்பதி பொம்மன் - பெள்ளி இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசாலையை முதல்வர் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...