தாராபுரத்தில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு - மக்கள் அவதி

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த சில வாரங்களாகத் தொடரும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால், குழந்தைகள், முதியவர் உட்பட பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் காலை, மாலை, மதியம், இரவு என பல்வேறு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. மேலும், மின்சாரம் வந்து சென்றால் மின்விசிறி உட்பட வீடுகளில் உள்ள எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரிக் சாதனங்கள் பழுதாகிவிடுகின்றன.

தற்போது 12ஆம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு தேர்வில் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் வகையில் தொடரும் இந்த மின்வெட்டை சரிசெய்து, சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என தாராபுரம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...