கோவையில் சாலையோரம் நின்றிருந்த கார் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டர் மில்ஸ் அருகே கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேஸ் லீக்கானதால் கார் தீப்பிடித்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: மேட்டுப்பாளையம் சாலையில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த கார் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மேட்டுப்பாளையம் கவுண்டமில்ஸ் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த காரில் இருந்து புகை வருவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.



தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ மளமளவென கார் முழுவதும் பரவியது.



பின்னர் தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான கார் என்பதும், காரின் பொருத்தப்பட்டிருந்த சிலிண்டரில் இருந்து கேஸ் லீக் ஆனதால் தீ பற்றி இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.



கோவையில் பட்டப்பகலில் பகலில் நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...