ஆன்லைன் ரம்மியை தடை செய்யாமல் குழப்பம் செய்வது ஆளுநருக்கு அழகல்ல..! - அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு

கோவை பாரதியார் பல்கலைக்கழக அரங்கில் நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பில், 14வது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். இதில், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.



கோவை: கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக அரங்கில் 14வது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.



கோவை பாரதியார் பல்கலைக்கழக அரங்கில் மத்திய அரசின் கீழ் இயங்கும் நேரு யுவகேந்திரா சங்கத்தான் அமைப்பின் சார்பில் 14வது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.



இதில் சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், பாரதியார் பல்கலைக்கழகம் உட்பட கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். அடுத்த 7 நாட்களுக்கு பல்வேறு கலாச்சாரங்களை பரிமாறும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் இதில், நடைபெற உள்ளது.



இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல்ஆணையர் பாலகிருஷ்ணன், பெங்களூர் நேரு யுவகேந்திரா மண்டல இயக்குனர் நட்ராஜ், மாநில இயக்குனர் செந்தில்குமார், திருச்சி டி.எஸ்.பி லில்லி கிரேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்நிகழ்வில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு, யாதும் ஊரே யாவரும் கேளிர் என பல்வேறு சிறப்புகளை கொண்டது. யாதும் ஊரை யாவரும் கேளிர் என்பது தமிழர்களின் பண்பாடு. இந்த ஊர் உங்கள் ஊர், இங்குள்ளவர்கள் உங்கள் உறவினர்கள் என கூறிய அவர் இந்த ஏழு நாட்களையும் பயனுள்ள வகையில் உபயோகிக்க வேண்டும் என பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ள மாணவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.



ஒவ்வொருவரின் கலாச்சாரம், பிரச்சனைகள் மட்டுமின்றி உங்கள் அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் அனைவரையும் இணைத்து நல்ல திட்டங்களை தர வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார், என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது,



தமிழக முதல்வர் அனைவரையும் ஒருங்கிணைத்த வளர்ச்சியை முன்னிறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நேரு யுவகேந்திராவின் இந்த நிகழ்ச்சி பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களிடம் அவர்களது ஆளுமை திறனை வளர்ப்பதற்கும் பல்வேறு கலாச்சாரங்களை தெரிந்து கொள்வதற்கும் அவர்களது அரசியல் அறிவை வளர்த்து கொள்வதற்கும் இந்நிகழ்ச்சி பெரிதும் உதவும்.

நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தொழில்நுட்பம் சென்று சேரும் வகையில் மாநில தொழில்நுட்பத்துறை செயல்பட்டு வருகிறது. ஒவ்வொருவரின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காகவும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஏதோ ஒரு வகையில் தொழில்நுட்பம் உதவும் வகையில் துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அரசின் அனைத்து சேவைகளும் இணையதளம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இணையதள சேவையை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு செல்லும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இளைஞர்கள் நவீன புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதற்கான தொழில் நுட்ப உதவிகளையும் செய்து வருகிறோம். பழங்குடியினர் விவசாயிகள் உட்பட சாதாரண மனிதர்களிடம் தொழில்நுட்பத்தை கொண்டு செல்லும் வகையில் முதல்வரின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

ஆன்லைன் ரம்மி பல உயிர்களை பறித்து பல குடும்பங்களை தெருவுக்கு கொண்டு வந்துள்ளது. எனவே அதனை தடை செய்யும் வகையில் மாநில அரசு சட்டம் இயற்றி ஆளுநரிடம் அனுப்பியது. அதை அனுமதிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. அதை செய்யாமல் குழப்பும் வகையில் செயல்படுவது ஏற்புடையதல்ல. மக்களின் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு, அவர் பேசினார். இந்நிகழ்வில் அமைச்சர் மனோ தங்கராஜ் பழங்குடியின மாணவர்களோடு இணைந்து நடனமாடி மகிழ்ந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...