ஆரூத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி மோசடி வழக்குகளின் நிலை என்ன..? - பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள் விளக்கம்

தமிழ்நாட்டில் பல்லாயிரம் கோடி ரூபாய் பொதுமக்களிடம் வசூலித்து மோசடி செய்த ஆரூத்ரா, ஹிஜாவு, எல்என்எஸ், ஐஎப்எஸ் மற்றும் இஎல்எப்ஐஎன் நிதி நிறுவனங்களில் இருந்து பல கோடி ரூபாய் பறிமுதல் செய்து, வங்கி கணக்கில் உள்ள பல நூறு கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.



சென்னை: பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையிலிருந்து வரும் முக்கிய வழக்குகளான ஆருத்ரா கோல்ட் டிரேடிங், ஹிஜாவுஅசோசியேட்ஸ், எல்என்எஸ், ஐஎப்எஸ் மற்றும் இஎல்எப்ஐஎன் நிதி நிறுவனங்கள் மோசடிகள் மீதான புலன் விசாரணை குறித்து பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:



ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட வைப்பீடுகளுக்கு மாத வட்டியாக 25 சதவீத முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படும் என்று சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் ரூ.2,438 கோடி முதலீடு பெற்றுள்ளது.

மோசடி செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு முக்கிய ஏஜென்ட்டுகள் என மொத்தம் 21 பேரை குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளது. இதில் இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், நாகராஜ் மற்றும் பேச்சிமுத்து ராஜா, அய்யப்பன் ரூசோ ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்களைப் பிடிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இவ்வழக்கில் இதுவரை ரொக்கமாக 5.69 கோடியும், ரூ.1.13 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் வங்கிக் கணக்கிலிருந்த பணம் ரூ.96 கோடி முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய ஆசையா சொத்துகள் 97 கண்டறியப்பட்டுள்ளது.

ஹிஜாவு நிறுவனம் தொடங்கி 89,000 முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.4,400 கோடி வரை முதலீடுகள் பெற்று மாந்திர வட்டி மற்றும் தொகையை திருப்பி செலுத்தவில்லை. இதன் 19 துணை நிறுவனங்கள், மேலாண்மை இயக்குநர்கள், கமிட்டி உறுப்பினர் என 52 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் நேரு, குருமணிகண்டன், முகம்மது, ஷெரிப், சாந்தி, பால முருகன் கல்யாணி,சுஜாதா, பாலாஜி, பாரதி, ரவிச்சந்திரன், சுஜாதா ஆகியோர் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 162 வங்கி கணக்குகளில் உள்ள, ரூ.14.47 கோடி முடிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியிடம் சுமார் ரூ.45 கோடி மதிப்பு உள்ள அசையா சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளது.

எல்என்எஸ் நிறுவனத்தை தொடங்கி 84,000 நபர்களிடமிருந்து சுமார் ரூ.5,900 கோடி முதலீடி பெற்று ஏமாற்றியுள்ளனர். எல்என்எஸ், ஐஎப்எஸ் மற்றும் 5 துணை நிறுவனங்களில் மொத்தம் 19 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு, மூன்று பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் தொடர்புடைய 31 இடங்களில் சோதனை செய்து ரூ.1.12, கோடியும், ரூ. 34லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், 16 கார்கள், 49 அசையாத சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கு முன்னால் அதிக வட்டி எவ்வாறு அளிக்கிறார்கள் என்பதை குறித்து ஆர்பிஐ மூலமாக சோதித்து பின்பு முதலீடு செய்தால் இதுபோன்ற நிறுவனங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...