கோவையில் ஒருதலைக் காதல் - சினிமா பாணியில் தாக்கிக் கொண்ட மாணவர்களால் பரபரப்பு

கோவை ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரியில் ஒரே மாணவியை இருவர் காதலித்த விவகாரத்தில், 3ஆம் ஆண்டு படித்து வந்த மாணவரை, சினிமா பாணியில் காரில் கடத்திச் சென்று விடிய விடிய வைத்து தாக்கிய 6 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.


கோவை: ஈச்சனாரியில் கல்லூரி மாணவரை காரில் கடத்தி தாக்கிய, மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் இசை பூங்குன்றன்(20). இவர் கோவை ஈச்சனாரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கம்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். மேலும் இவரும் அதே கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வரும் கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த மாணவியுடன் படித்து வரும் அபிஷேக் என்ற சக மாணவரும் அந்த மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த மாணவி இசை பூங்குன்றனை காதலிப்பது தெரியவந்ததால், மாணவியை பற்றி அபிஷேக் தவறாக பேசி வந்ததாக தெரிகிறது.

இது குறித்து கடந்த 12ஆம் தேதி இசைபூங்குன்றன் மற்றும் அவரது நண்பர்கள் கேட்டுள்ளனர். அப்போது தவறாக பேசியதற்கு அபிஷேக் மன்னிப்பு கேட்டுள்ளார். பின்னர் அபிஷேக் மன்னிப்பு கேட்டது குறித்து அவரது நண்பர்களுக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து மறுநாள் இரவு அபிஷேக் தனது நண்பர்களான கவுசிக் பிரவீன் (26), நவீன்குமார் (19), ஆசிக்ரகுமான் (19), பாண்டியராஜன் (21), தீபக் (19), சஞ்சய் (20) ஆகியோருடன் சேர்ந்து ஈச்சனாரின் அருகே உள்ள இசைபூங்குன்றனின் அறைக்குச் சென்று அவரை பெல்டால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

அப்போது அறையில் இருந்த ராகுல் என்ற மாணவரை தாக்கியுள்ளனர். இதையடுத்து இசைபூங்குன்றனை காரில் கடத்திச் சென்று ஈச்சனாரி பகுதியில் உள்ள காலியிடத்தில் வைத்து மீண்டும் கொடூரமாக தாக்கியுள்ளனர். அதனை தொடர்ந்து ராமநாதபுரம் 80 அடி சாலையில் உள்ள வேறு ஒருவரின் அறைக்கு அழைத்துச் சென்று அங்கும் வைத்து இரவு முழுவதும் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த இசை பூங்குன்றன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போத்தனூர் போலீசார் கவுசிக் பிரவீன், நவீன்குமார், ஆசிக்ரகுமான், பாண்டியராஜன், தீபக், சஞ்சய் ஆகிய ஆறு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனிடையே இசை பூங்குன்றனை தாக்கியதை அறிந்த அவரது நண்பர்களான சசிகுமார், சிரதீப், அபிஜித், கவுதம் ஆகியோரை அபிஷேக் அறைக்குச் சென்று அவரை ஈச்சனாரி அழைத்து வந்த அரிவாளை திருப்பி வைத்து தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அபிஷேக் மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



இது குறித்து வழக்குப் பதிவு செய்த மதுக்கரை போலீசார் சசிகுமார், சிரதீப், அபிஜித், கவுதம் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...